தொலைபேசி:+91 452 2311875       தொலைநகலி:+91 452 2312375

நடத்தப்பட்டுவரும் வகுப்புகள் |  வகுப்பு - கால அட்டவணை |  பட்டய வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் |  சான்றிதழ் வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் |  ஆசிரியர்கள்


   

கல்வித்தந்தை திருவாளர் கருமுத்து தியாகராசர் அவர்களால் நிறுவப்பட்ட கலைக்கோயில்களில் ஒன்று பழம் பெருமை கொண்ட மதுரை தியாகராசர் கல்லூரி.

அன்னார் கல்வித்தந்தை மட்டுமல்ல; கலைத்தந்தையும் கூட.

எனவே கலைத் தந்தையின் எண்ணத்திற்கிணங்க நமது கல்லூரியில் 64 கலைகளில் முதன்மையான கலையான இசைக்கலைக்கு ஓர் ஆய்வுமையம் தொடங்குவது தமிழ் கூறு நல்லுகத்தின் நற்பேறு.

பெருகிவரும் உலகமயத்தில் நமது பண்பாட்டு, சமூக, கலை, மொழி அடையாளங்களை இழந்து விடாது காப்பதில் இவ் ஆய்வுமையம் தொடர்ந்து பணியாற்றும்; இழந்த நம் இசைச்செல்வங்களை மீட்டெடுக்கும்; இன்று நம்மிடம் இருக்கும் நமது இசைக் கருவூலங்களை ஆவணப்படுத்தும்.


தமிழிசை ஆய்வு மையம்
2013ஆம் ஆண்டு, ஆடி 1ஆம் நாள், புதன்கிழமை
தியாகராசர் கல்லூரி வளாகத்தில்
'இசைஞானி' இளையராஜா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 


திரு.கருமுத்து.தி.கண்ணன்
தலைவர்
முனைவர்.திருமதி.உமா கண்ணன்
துணைத் தலைவர்
திரு.க.தியாகராசன்
செயலர்
திரு.பால்.சி.பாண்டியன்
புரவலர்


முனைவர்.து.பாண்டியராஜா
முதல்வர்
முனைவர்.கு.ஞானசம்பந்தன்
ஒருங்கிணைப்பாளர்
திரு.நா.மம்மது
தமிழிசை ஆய்வாளர்


அமெரிக்காவிலிருந்து திரு.பால்.சி.பாண்டியன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ் இசை வளர்ச்சிக்கு நூற்றாண்டுகள் தோறும் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் ஞாலத்தின் மாணப்பெரிய முயற்சிகளைச் செய்துள்ளனர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள “தமிழிசை ஆய்வு மையம்” தொடர்ந்து செய்யக்கூடிய ஒரு சிறிய முயற்சி. தியாகராசர் கல்லூரி, இப்பணியை முன்னெடுத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்; பாராட்டுகின்றேன். அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 17-07-2013
Site by www.maduraidirectory.com