| |
|
|
Saiva Siddhandham Training Programme
இப்பயிற்சி வகுப்பு பொதுநிலை. சிறப்புநிலை என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. 'சித்தாந்த சரபம்' முனைவர்.ஆ.ஆனந்தராசன் இப்பயிற்சி வகுப்பின் இயக்குநராக இருந்து வழிநடத்தி வருகிறார். பொதுநிலையில், சைவசித்தாந்த அடிப்படைகள், சிவஞானபோதம், திருவருட்பயன், உண்மை விளக்கம் ஆகிய அடிப்படைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. முனைவர்ஆ.ஆனந்தராசன், முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, முனைவர்.பழ.முத்தப்பன், முனைவர்.மு.அருணகிரி, முனைவர்.சு.சண்முகசுந்தரம், பேரா.உ.விஜயலெட்சுமி ஆகியோர் பாட ஆசிரியர்களாய் இருந்து சிறப்பித்தனர்.
சிறப்பு நிலையில் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், வினாவெண்பா, கொடிக்கவி, ஆலய வழிபாட்டின் உட்பொருள், தசகாரியம் ஆகிய பாடங்கள் ஆழமான கருத்துக்களோடு பயிற்றுவிக்கப்பட்டன. முனைவர்.ஆ.ஆனந்தராசன், முனைவர்.ந.ரா.சென்னியப்பன், திரு.சு.மாணிக்கவாசகம், திரு.க.சண்முகம் ஆகியோர் பாட ஆசிரியர்களாய் இருந்து தெளிவு காட்டினார்.
இப்பயிற்சி வகுப்பில் பொதுநிலையில் 40 பேரும் சிறப்பு நிலையில் 26 பேரும் பங்கேற்றனர். இவர்கள் மலேசியா நாட்டிலிருந்தும், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் சென்னை, தஞ்சை, கோவை, திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களிலிருந்தும் வந்து வகுப்பில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் 10 நாட்களும் முழுவதும் இலவசமாக தங்குமிடமும் உணவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன பாடங்களுக்குத் தேவையான குறிப்புகளும் நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டன. கலந்துரையாடல் மூலம் பயிற்சியாளர்களின் ஐயங்களுக்கு ஆசிரியர்களால் விடையளிக்கப்பட்டன. மாலையில் அனைவருக்கும் ஓதுவார் திரு.இரத்தனசபாபதி திருமுறைப் பாடற்பயிற்சி அளித்தார்.
|
|
|